ஜம்மு காஷ்மீர் மே, 6
ஜம்மு காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் நேற்று முன்தினம் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் விமானப்படை வீரர் ஒருவர் உயிரிழந்தார். இந்நிலையில் இது தீவிரவாத தாக்குதல் அல்ல தேர்தலுக்காக பாரதிய ஜனதா கட்சி நடத்தும் நாடகம் எனப் பஞ்சாப் முன்னாள் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னி விமர்சித்துள்ளார். தேர்தல் நடைபெறும் போதெல்லாம் இத்தகைய நாடகத்தை பாரதிய ஜனதா கட்சி அரங்கேற்றி வருவதாக கூறிய அவர், இந்த தாக்குதலில் எந்த உண்மையையும் இல்லை என்றார்.