திருப்பூர் ஏப்ரல், 26
பல்லடத்தில், தேர்தல் விதிமீறல் தொடர்பாக பல்வேறு அரசியல் கட்சிகள் மீது 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மக்களவை தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தேர்தல் அறிவிப்பு வெளியானதும், விதிமுறைகளும் அமலுக்கு வந்தன. தேர்தல் விதிமுறைகளை பின்பற்றாத வகையில், பல்லடம் சட்டசபை தொகுதியில் பல்வேறு அரசியல் கட்சிகள் மீது பல்லடம் காவல் நிலையத்தில் மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கடந்த 1ம் தேதி முதல் பா.ஜ.க 18, அ.தி.மு.க 5 மற்றும் தி.மு.க 4 என மொத்தம் 27 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர தேர்தலை புறக்கணிப்பது உள்ளிட்ட காரணங்களின் அடிப்படையில் பொதுமக்கள் மீது 3 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.