தைவான் ஏப்ரல், 23
தைவானில் 9 நிமிட இடைவெளியில் அடுத்தடுத்த ஐந்து முறை நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சத்தில் உறைந்தனர். நேற்று மாலை தொடங்கி இரவு வரை கிழக்கு ஹுவாலியன் கவுண்டியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 6.3 ஆக மூன்றாக பதிவானது. இதனால் தைபேயில் உள்ள கட்டடங்கள் குலுங்கின. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரம் வெளியாகவில்லை. அங்கு ஏப்ரல் மூன்றில் இருந்து நிலநடுக்கத்தில் சிக்கி 17 பேர் பலியாகினர்.