ராமநாதபுரம் ஏப், 22
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பல்வேறு சமூக சேவைகளை செய்துவரும் 18 வாலிபர்கள் ஷஹீத் கல்வி மற்றும் நல அறக்கட்டளை (ஜகாத் கமிட்டியின்) பொதுக்குழு கூட்டம் ஜகாத் கமிட்டியின் அலுவகத்தில் நடந்தது,
மூத்த உறுப்பினரும் கௌரவ ஆலோசகருமான க.கு அப்துல் ஜப்பார் மற்றும் சிக்கந்தர் பாட்சா ஆகியோர் தலைமையில் ஜகாத் கமிட்டி செயலாளர் ஷாஹுல் ஹமீது முன்னிலையில் ஜகாத் கமிட்டி தலைவர் ஜாஹிர் ஹுசைன் வரவேற்புரை வழங்க பொருளாளர் சீனி முஹம்மது ஆண்டறிக்கை வாசிக்க துணைத்தலைவர் நஜீம் மரிக்கா தொகுத்து வழங்க, கமிட்டி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ள சிறப்பாக நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக நாளும் ஒரு நபிமொழி புகழ் கீழக்கரை புதுப்பள்ளி கத்தீப் மன்சூர் நூரி ஆலிம் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதுவரைக்கும் 3850 முறை நாளும் ஒரு நபிமொழி பதிவு செய்த மௌலானா மன்சூர் நூரி ஆலிமின் சேவையை பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் ஊடக துறையில் சிறப்பாக செயல்பட்டு வரும் நிருபர் முஹம்மது பாக்கருக்கும் பாராட்டி பொன்னாடை போர்த்தி நினைவு கேடயம் வழங்கப்பட்டது.
மேலும் இக்கூட்டத்தில் தற்போது இருக்கும் நிர்வாகிகளே 2026 வரை தொடர்ந்து செயல்படுவார்கள் என ஏக மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும் புதியதாக செயற்குழு உறுப்பினர் சேர்க்கப்பட்டது.
இந்நிகழ்வின் நிறைவாக ஷுஹாதாகள் பள்ளியின் இமாம் அப்துல் ரவூப் ஆலிம் துவா ஓத கமிட்டியின் முதன்மை நிர்வாகி அஹமது குதுபுத்தீன் ராஜா நன்றியுரையுடன் கூட்டம் நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,//இணை ஆசிரியர்.