மாமல்லபுரம் ஏப்ரல், 21
மாமல்லபுரத்தை அடுத்த நெம்மேலி தர்காவில் நடைபெற்ற சந்தனக்கூடு திருவிழாவில் இசையமை.ப்பாளர் ஏ ஆர் ரகுமான் பங்கேற்றுள்ளார் கோலாகலமாக தொடங்கிய இந்த திருவிழாவில் தமிழகத்தை சேர்ந்த பல இஸ்லாமியர்கள் திரளாக கலந்து கொண்டனர். இதில் முகமூடி அணிந்தபடி வந்த ஏ. ஆர் ரகுமான் சக இஸ்லாமிய நண்பர்களுடன் சேர்ந்து சிறப்பு துவா ஓதி பிரார்த்தனை செய்தார். இதன் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி உள்ளது.