சென்னை ஏப்ரல், 16
சொந்த ஊர்களுக்கு வாக்களிக்க செல்வோர் முன்கூட்டியே திட்டமிட்டு செல்லுமாறு போக்குவரத்து துறை அறிவுறுத்தி உள்ளது. ஏப்ரல் 19ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அதனைத் தொடர்ந்து சனி, ஞாயிறு விடுமுறை வருவதால் மக்கள் சொந்த ஊர்களுக்கு படையெடுக்க வாய்ப்பு உள்ளது. இதனை கருத்தில் கொண்டு பத்தாயிரம் சிறப்பு பேருந்துகளை இயக்க போக்குவரத்து துறை ஏற்பாடு செய்துள்ளது.