சென்னை ஏப்ரல், 16
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வதற்காக நிதி திரட்ட படம் ஒன்றை எடுக்க உள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்துள்ளார். ‘கை கொடுக்கும் கை’ மாற்று திறனாளிகள் குழு சார்பில் நடந்த மல்லர் கம்பம் சாகச நிகழ்வில் பேசிய அவர், மாற்றுத்திறனாளி பசங்க வீட்டு வாடகை கட்ட முடியாத நிலையில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வீடு கட்டி தர உள்ளேன். அதற்காக இந்த கதை விவாதம் நடந்து கொண்டிருக்கிறது என்றார்.