Spread the love

பரமக்குடி ஏப்ரல், 16

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி பார்மா காலனியை சேர்ந்த மணிகண்டன் என்பவர் பரமக்குடியில் ஆண்டு தோன்றும் நடைபெறும் சித்திரை திருவிழாவின் போது வைகை ஆற்றில் இராட்டிணம் அமைத்து தொழில் செய்வது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டும் இராட்டிணம் அமைப்பது சம்பந்தமாக தடையில்லா சான்று கேட்டு பரமக்குடி நீர்வளத்துறையில் கோட்டப்பொறியாளருக்கு மனுசெய்தார். அம்மனு நிராகரித்துள்ளனர். எனவே மணிகண்டன் உயர் நீதிமன்றத்தை ஆணுகியுள்ளார். அத‌ன்படி பரமக்குடி ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவிலுக்கு ரூ.1,50,000 நன்கொடையும் பரமக்குடி பொதுப்பணித்துறை (நீர்வளத்துறை)க்கு ரூ.65,000 கட்டணமும் செலுத்தி அனுமதி வாங்கிக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டது.

அதன்படி மணிகண்டன் சம்பந்தப்பட்ட துறைகளுக்கு செலுத்த வேண்டிய நன்கொடை மற்றும் கட்டணத்தை செலுத்திவிட்டு

பரமக்குடி நீர்வளத்துறையில்

பணிபுரியும் உதவி கோட்ட பொறியாளர் கார்த்திகேயன் என்பவரை சந்தித்து தடையில்லா சான்று சம்பந்தமாக கேட்டுள்ளார். அப்போது அவர் தடையில்லா சான்று வேண்டுமானால் இவ்வலுவலக அதிகாரிகளை தனியாக கவனிக்க வேண்டும் என்றும் இது சம்பந்தமாக தனது உதவி பொறியாளர் திரு.சம்பத்குமார் டீல் பண்ணுவார் அவரை போய் பாருங்கள் என்று கூறியுள்ளார். அதன்படி மணிகண்டன் உதவி பொறியாளரை அணுகியபோது அவர் ரூ.30,000 இலஞ்சமாக கேட்டுள்ளார்.

இன்னிலையில் இலஞ்சம் கொடுக்க விரும்பாதமனுதாரர் இராமநாதபுரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு காவல் துறையில்

புகார் செய்ததை அடுத்து வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து இலஞ்ச ஒழிப்பு துறை போலிஸாரின் அறிவுத்தலின் பேரில் இரசாயனம் தடவிய ரூ.30,000 த்தை உதவி பொறியாளர் சம்பத்குமாரிடம் கொடுத்த போது அங்கு மறைந்திருந்த இலஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் கையும் களவுமாக பிடித்தனர். மேற்படி இரண்டு அதிகாரிகள் மீது தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

ஜஹாங்கீர் அருஸி

மாவட்ட நிருபர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *