புதுடெல்லி ஏப்ரல், 15
இந்தியாவின் அன்னிய செலாவணி கையிருப்பு கடந்த 30 மாதங்களில் இல்லாத அளவுக்கு 64,856.2 கோடி டாலராக உயர்ந்துள்ளது. ரிசர்வ் வங்கி வெளியிட்ட செய்தி குறிப்பில், ஏப்ரல் ஐந்தாம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 298 கோடி டாலர் உயர்ந்துள்ளது. இதற்கு முன்பு அதிகபட்சமாகக் கடந்த 2021 அக்டோபரில் நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 64,245. 3 கோடி டாலரை எட்டியது என கூறப்பட்டுள்ளது.