சென்னை ஏப்ரல், 14
பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. தமிழக முழுவதும் 83 முகாம்களில் நடந்த இப்பணியில் சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுநிலை ஆசிரியர்கள் ஈடுபட்டனர். திருத்தும் பணிகள் நிறை முடிவுற்றதால் மாணவர்களின் மதிப்பெண்களை இணையத்தில் பதிவேற்றும் பணி நாளை தொடங்க உள்ளது. திட்டமிட்டபடி மே 6ம் தேதி முடிவுகள் வெளியாக உள்ளன.