சென்னை ஏப்ரல், 9
இந்தியாவில் உருவாகும் புதிய தொழில்நுட்பங்களை உலக அளவில் கொண்டு சேர்க்க புதிய ஆராய்ச்சி அறக்கட்டளை ஒன்றை சென்னை ஐஐடி தொடங்கியுள்ளது. இந்த அறக்கட்டளையின் சிஇஓவாக வணிக மேலாண்மை மற்றும் தொழில்நுட்ப நிபுணர் திருமலை மாதவ நாராயணன் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த அறக்கட்டளை இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு சர்வதேச அளவில் தொழில்நுட்பம் மற்றும் நிதி போன்ற வணிகரீதியான உதவிகளை பெற்று தரும் எனக் கூறப்படுகிறது.