வேலூர் ஏப்ரல், 10
பிரதமர் மோடி சென்னையில் நேற்று மாலை ரோடு ஷோவில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார். தொடர்ந்து கிண்டி ஆளுநர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை வேலூர் செல்கிறார். அங்கு புதிய நீதிக் கட்சி வேட்பாளர் சண்முகத்துக்கு ஆதரவு திரட்டுகிறார். பின்பு அங்கிருந்து நீலகிரி செல்லும் அவர் அங்கு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் வேல்முருகன் அண்ணாமலை உள்ளிட்டோருக்கு வாக்கு சேகரிக்க உள்ளார்.