மதுரை ஏப்ரல், 6
நான் பேசினால் மழை வரும் என்று சொன்ன அண்ணாமலைக்கு நோபல் பரிசு கொடுக்க வேண்டும் என செல்லூர் ராஜு கிண்டலாக பேசியுள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “அண்ணாமலையும், பிரதமர் மோடியும் கச்சத்தீவை மீட்டெடுப்போம் என்று இப்போது வந்து சொல்கிறார்கள். கடந்த பத்து ஆண்டு காலம் இவர்கள் ஆட்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது ஆட்சியில் பாஜக என்ன செய்து கொண்டிருந்தது” என கேள்வி எழுப்பினார்.