துபாய் மார்ச், 29
ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் அல் நஹ்தா பகுதியில் உள்ள ஹோட்டலில் CWM நிறுவனத்தின் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ராஜேஸ்வரி மதிவாணன் மற்றும் அவர் தாயார் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் தொலைக்காட்சி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் முதன்மை நிருபர் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் இணை ஆசிரியர் நஜீம் மரிக்கா, TAM கன்சல்டன்சி நிறுவனத்தின் நிறுவனர் ஷாநவாஸ், நவரத்தினா ஜுவல்லரி நிர்வாகிகள் ஷமீம், ஃபாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள், ஆதரவாளர்கள் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் சகபணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் தமிழகத்தில் வெளியாகும் தமிழ்குரல் நாளிதழ் சார்பில் தமிழகத்தின் நம்பிக்கை நாயகி 2024 விருது, CWM நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் இராஜேஸ்வரி மதிவாணனுக்கு கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளரும் தமிழ்குரல் நாளிதழ் முதன்மை நெறியாளருமான கமால் கேவிஎல் வழங்கி கெளரவித்தார்.
இந்நிகழ்வு துபாய் அல் நஹ்தாவில் நெஸ்டோ மாலில் உள்ள நவரத்தினா ஜுவல்லரியில் கடையில் ஜுவல்லரியின் மேலாண்மை இயக்குனர் ஃபாரிஸ் மற்றும் ஷமீம் நிர்வாக இயக்குனர் முன்னிலையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரிக்கப்பட்டு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் இராஜேஸ்வரி மதிவாணன் நன்றியுரையுடன் நிகழ்ச்சியை நிறைவுசெய்தார்.
M.நஜீம் மரைக்கா B.A.,//இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.