சென்னை மார்ச், 27
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ள நிலையில், வேட்பு மனு தாக்கல் மார்ச் 20 ம் தேதி தொடங்கியது. இருப்பினும் பெரும்பாலான வேட்பாளர்கள் தங்களது வேட்பு மனுக்களை மார்ச் 25ம் தேதி தாக்கல் செய்தனர். இந்நிலையில் இன்றுடன் வேட்பு மனு தாக்கல் நிறைவு பெறுகிறது. வேட்பு மனு தாக்கல் செய்யாத வேட்பாளர்கள் இன்று தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.