கான்பூர் மார்ச், 25
மக்களவைத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என உத்திரப் பிரதேசத்தின் கான்பூர் தொகுதி பாரதிய ஜனதா கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சத்தியதேவ் பச்சௌரி அறிவித்துள்ளார். வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆன பின்பு தற்போது அவர் இவ்வாறு அறிவித்திருப்பது பாஜகவினர் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. போட்டியிட மறுப்பு மறுத்து பாஜக தலைமைக்கு பச்சௌரி ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். இதனை அடுத்து புதிய வேட்பாளரை தேடுகிறது பாரதிய ஜனதா கட்சி.