புதுடெல்லி மார்ச், 21
ஈஷா யோகா நிறுவனர் ஜக்கி வாசுதேவிட பிரதமர் மோடி நலம் விசாரித்தார். மூளையில் ஏற்பட்ட ரத்த கசிவு காரணமாக புதுடெல்லியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17ஆம் தேதி அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ள அவரை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட பிரதமர் மோடி விரைவில் நலம் பெற வேண்டும் என ஆறுதல் தெரிவித்தார்.