நெல்லை மார்ச், 19
நெல்லை மக்களவைத் தொகுதியில் 10 ஆண்டுகளுக்குப் பிறகு காங்கிரஸ் மீண்டும் போட்டியிடுகிறது. இத்தொகுதி நெல்லை, பாளையங்கோட்டை, நாங்குநேரி, ராதாபுரம், அம்பை, ஆலங்குளம் ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ளடக்கியது. இதில் திமுக கூட்டணியில் 2004, 2009 ல் வெற்றி பெற்ற காங்கிரஸ் 2014ல் தனித்து போட்டியிட்டு தோல்வியடைந்தது. 2019 ல் திமுகவுக்கு ஒதுக்கப்பட்ட நிலையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் காங்கிரஸ் களமிறங்குகிறது.