கீழக்கரை மார்ச், 18
இந்தியா முழுவதும் CAA சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ஒன்றிய பாஜக உள்துறை அமைச்சர் அமீத்ஷா நோன்பின் துவக்கத்தில் அறிவிப்பு செய்தார். இதற்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளன.
தமிழகம், கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் ஒன்றிய பாஜக அரசின் அறிவிப்பை திரும்ப பெறக்கோரி SDPI கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையிலும் நடுத்தெரு ஜும்ஆ பள்ளி வாயில் முன்பு SDPI கட்சி நகர் தலைவர் அபுதாஹிர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கீழக்கரை முன்னாள் நகர் தலைவர் ஹமீது பைசல் கண்டன உரையாற்றிட நகர் செயலாளர் காதர் உள்ளிட்ட நிர்வாகிகள்,செயல்வீரர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.