கீழக்கரை மார்ச், 18
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை சார்பில் வெள்ளை மாளிகையில் வைத்து நோன்பு பிடிக்கும் வெளியூரில் இருந்து கீழக்கரை தங்கியிருக்கும் ஆலிம்கள், மாணவர், மாணவியர்கள்,பொதுமக்கள் என பலருக்கும் சஹர் நேர சாப்பாடு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
நோன்பாளிகளின் சிரமத்தை தவிர்க்கும் வகையில் இரவு 10.30 மணிக்கெல்லாம் சஹருக்கான உணவை பார்சலாக கொடுத்து விடுகின்றனர். முதல் நாள் 313 நபர்களுக்கென்று வழங்கப்பட்ட உணவு இன்று 450 நபர்களுக்கு வழங்கப்பட்டது.
சோறு, குழம்பு, வறுவல் அல்லது பொரியல் என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையான உணவு வழங்கப்படுகின்றன. நேற்று (17.03.2024) தாளிச்ச சோறு,சிக்கன் பொரியல், தாளிச்சா உணவாக வழங்கப்பட்டது. ரமலான் மாதம் முழுவதும் உணவின் தரம் மற்றும் சுவை குறையாமல் கவனமாக பார்த்து வழங்குவதை கண்ணாடி வாப்பா அறக்கட்டளை நிர்வாகிகள் கடமையென கருதுகின்றனர்.
இதுகுறித்து நமது செய்தியாளர் நேரில் சென்று உணவு வினியோக பொறுப்பாளர்களில் முதன்மை நிர்வாகி சித்தீக் அவர்களிடம் கேட்ட போது, பல ஆண்டுகளாக நோன்புக்கான உணவினை கண்ணாடி வாப்பா அறக்கட்டளையினர் வழங்கி வருவதாகவும் நோன்பு அல்லாத காலங்களில் வருடம் முழுவதும் பகல் சாப்பாடு வழங்குவதாகவும் கூறினார்.
நாமும் உணவினை ருசி பார்த்த போது தரம் மற்றும் சுவை சற்றும் குறைவில்லாமல் இருந்ததை காணமுடிந்தது. உலகம் உள்ளளவும் இவர்களின் இறைப்பணி இறைவனின் அருளால் தொடர வாழ்த்துவோம்.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்.