கீழக்கரை மார்ச், 20
பாராளுமன்ற தேர்தல் அறிவிப்பு வந்ததும் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் நடைமுறைக்கு வந்துவிட்டன. இதனைத் தொடர்ந்து ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நகராட்சி நிர்வாகம் துரிதகதியில் செயல்பட்டு அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரம் மற்றும் கல்வெட்டுகளை மறைக்கும் வேலையை செய்து வருகின்றனர்.
நகர்மன்ற தலைவர் அறை மூடப்பட்டது. நகர்மன்ற தலைவருக்கான அரசு வாகனம் திரும்பப் பெறப்பட்டன. ஆளும்கட்சியினரின் பெயர் கொண்ட நிழற்குடை விளம்பரம் மற்றும் ஹைமாஸ் விளக்குகளின் கல்வெட்டுகளில் செய்தி பேப்பர் மூலம் மறைக்கப்பட்டுள்ளன.
ஒருசில இடங்களில் ஹைமாஸ் விளக்குகளின் கல்வெட்டுகளில் ஒட்டப்பட்ட செய்தித்தாளை சிறுவர்கள் கிழித்து விட்டதால் அந்த கல்வெட்டுகள் அரசியல் கட்சியினரின் பெயரை விளம்பரப்படுத்துவது போல் உள்ளன. இதுவிசயத்தில் தேர்தல் அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.
தேர்தலில் 100% வாக்களிப்போம் என்ற பதாகைகள் கொண்ட தேர்தல் விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் ஊர் முழுவதும் செய்யப்பட்டு வருகின்றன.
கீழக்கரை நகராட்சி ஆணையர் செல்வராஜ்,சுகாதாரத்துறை ஆய்வாளர் பரக்கத்துல்லா ஆகியோர் மேற்பார்வையில் தேர்தல் நடைமுறை குறித்த விதிமுறைகள் பின்பற்றப்படுகிறது.
ஜஹாங்கீர் அரூஸி
மாவட்ட நிருபர்