துபாய் மார்ச்.18
ஐக்கிய அரபு அமீரக துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடைபெற்ற “Business Excellence” விருதிற்கான போஸ்டர் வெளியீடு நிகழ்ச்சி துபாய் போர்ட் சயீத் பகுதியில் உள்ள ஜவஹர் கார்டன் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் தமிழ் மன்றம் தலைவர் பொன்ராஜ் டேனியல் மற்றும் செயலாளர் செந்தில் தலைமையில் கேப்டன் தொலைக்காட்சி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், TEPA அமைப்பின் தலைவர் முனைவர் பால் பிரபாகர், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, முத்தமிழ் சங்கம் தலைவர் ஷா ஆகியோர் முன்னிலையில் தொகுப்பாளி அருணா வீரராகவன் தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக அமீரகத்தை சேர்ந்த அஹமது காலித், ஹைதம் முஹம்மது, சில்லர் பாயிண்ட் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் சரவணன், மாடலிங் மற்றும் திரைப்பட நடிகை வர்ஷினி, UTS UAE தமிழ் சங்கம் ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, முத்தமிழ் பாலு, ரெஸ்கேர் ஹோம் ஹெல்த் கேர் நிர்வாகிகள் ரம்ஜத் சேக், சஞ்சீவ் சி யேபன், ஜீஜோ ஜேக்கப், மகளீர் குரூப் கலைவாணி உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் துபாயில் தமிழ் மன்றம் சார்பில் நடத்தப்பட உள்ள “Business Excellence” விருதிற்கான போஸ்டர் வெளியிடப்பட்டது.
மேலும் இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் உணவு உபசரித்து அமைப்பின் தலைவர் பொன்ராஜ் டேனியல் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுபெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.