அமெரிக்கா மார்ச், 18
இந்தியன் வெல்ஸ் ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடரில் ஸ்பெயினின் சார்லஸ் அல்காரஸ் சாம்பியன் பட்டம் வென்றார். அமெரிக்காவில் நேற்று நடைபெற்ற ஒற்றை பிரிவின் இறுதிப் போட்டியில் ரஷ்யாவின் டேனியல் மேத்வதேவை எதிர்கொண்ட அல்காரஸ் 7-6, 7-5, 6-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். சாம்பியன் பட்டம் வென்ற அவருக்கு இந்திய மதிப்பில் ரூ.9.12 கோடி பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.