சென்னை மார்ச், 18
மக்களவைத் தேர்தல் காரணமாக தமிழகத்தில் ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இறுதி தேர்வுகளை ஏப்ரல் 13-ம் தேதிக்குள் நடத்தி முடிக்க தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வகுப்பு மற்றும் பாடவாரியாக தேர்வு கால அட்டவணையை பள்ளி கல்வி அதிகாரிகள் இறுதி செய்ய உள்ளனர். அதன் விபரம் இன்று அல்லது நாளை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.