சென்னை மார்ச், 24
நடப்பாண்டு +1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நாளையுடன் முடிவடைகிறது. இறுதி நாளில் கணிதம், விலங்கியல் வணிகவியல் உள்ளிட்ட பாடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளன. நாளை மதியம் தேர்வு முடிந்த உடன் பிளஸ் 1 மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. மீண்டும் பள்ளி எப்போது திறக்கப்படும் என்பது பின்னர் அறிவிக்கப்படும். மதிப்பெண் பதிவேற்றம் உள்ளிட்ட பணிகளை முடித்து திட்டமிட்டபடி தேர்வு முடிவுகள் மே 14-ல் வெளியிடப்படும்.