சென்னை மார்ச், 17
18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இன்று கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லை என்றாலும் கூட தற்போது விண்ணப்பிக்கலாம். தங்கள் பெயரை சேர்க்க விரும்புவோர் www.voters.eci.gov.in என்ற இணையதளத்திலும், Voter Helpline செயலி மூலம் விண்ணப்பிக்கலாம்.