சென்னை மார்ச், 17
தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் இனி ஒவ்வொருவரும் அதிகபட்சம் ரூ.50,000 வரை தான் ரொக்க பணம் கொண்டு செல்ல முடியும். ஐம்பதாயிரத்துக்கும் மேல் உரிய ஆவணம் இல்லாமல் பணம் எடுத்துச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் தலா 3 பறக்கும் படை, 3 நிலையான கண்காணிப்பு படை, மொத்தம் 1044 படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் வாகன சோதனை உள்ளிட்ட பல்வேறு சோதனைகளில் ஈடுபடுவர்.