துபாய் மார்ச், 13
ஐக்கிய அரபு அமீரக துபாய் கராமாவில் உள்ள SNG அரங்கில் அமீரக தமிழ் சங்கம் சார்பில் அதன் தலைவி டாகடர் ஷீலா தலைமையில் மிக சிறப்பாக நடைபெற்ற Autism Awareness Day கொண்டாட்டம்.
இந்த நிகழ்வில் அமீரகம் மற்றும் இந்தியாவிலிருந்து பல மாநிலத்தைச் சார்ந்த தனித்திறமையுடைய மாற்றுத்திறனாளி குழந்தைகளின் கலை மற்றும் சிறப்பு நிகழ்ச்சிகள் மற்றும் அமீரகத்தில் வசிக்கும் கடவுளின் குழந்தைகளை வரவழைத்து அவர்களுக்கான அங்கீகாரம் அளித்து மேலும் தனித்திறமையாளர்கள் அனைவருக்கும் அமீரக தமிழ் சங்க தலைவி முனைவர் ஷீலு நினைவு பரிசுகள், சான்றிதழ் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்விற்கு சிறப்பு விருந்தினர்களாக சல்வா குரூப் நிறுவனத்தின் நிறுவனர் பகவதி ரவி, கேப்டன் தொலைக்காட்சி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், ஸ்பிரேட் ஸ்மைல்ஸ் நிறுவனர் மக்கள் ஆர்ஜே சாரா, UTS ராமேஸ்விஸ்வநாதன், TEPA பால் பிரபாகர், தினகுரல் தமிழ் தேசிய நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வார இதழின் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, லட்சுமி பிரியா, ஜமுனா, ராபீன்சன் , இந்திராசதிஷ், மாடல் நடன இயக்குனர் சந்தீப், வேர் வசந்த், இன்ஸ்டா தஸ்லீம் மற்றும் அமீரக முக்கிய பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்டோர் குடும்பத்தோடு கலந்துகொண்டனர்.
இந்நிகழ்ச்சியின் நிறைவாக அமீரக தமிழ் சங்க தலைவி முனைவர் ஷீலு நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவு பெற்றது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்/அமீரக செய்திப் பிரிவு. U.A.E.