Spread the love

கீழக்கரை மார்ச், 13

ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை பஜார் பகுதியில் இம்பாலா சுல்த்தான் காம்ப்ளக்ஸ் முதல் தளத்தில் அல்மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளி உருவாக்கப்பட்டு அதன் திறப்பு விழா 10.03.2024 அன்று மாலை 5 மணிக்கு நடைபெற்றது.

ராமநாதபுரம் மாவட்ட அரசு காஜியும் அரூஸிய்யா தைக்கா அரபிக்கல்லூரியின் முதல்வருமான மௌலானா,மௌலவி சலாஹுதீன் ஆலிம் உமரி, அனைத்து ஜமாத்,சங்கங்களின் நிர்வாகிகள் முன்னிலையில் பள்ளியை திறந்து வைத்து விழாவுக்கு தலைமையேற்றார். பள்ளி இமாம் மௌலவி பஷீருதீன் ஆலிம் இறைமறை வாசிக்க மௌலவி யூசுப் ஆலிம் வரவேற்றார்.

கீழக்கரை வட்டாட்சியர் பழனிக்குமார், வருவாய் சங்க மாவட்ட செயலாளர் காசிநாதன் அல்மக்தூமியா பெண்கள் அரபுக்கல்லூரி முதல்வர் மௌலானா முஹம்மது இப்றாகீம் பாக்கவி, மதுரை ஜாமி ஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் பள்ளியின் முதல்வர் மௌலானா முஹம்மத் ஷகீல் தாவூதீ, ரெட்கிராஸ் சொசைட்டியின் சேர்மன் டாக்டர் சுந்தரம், இளம் சாதனையாளர் இன்ஷாப் முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மேலத்தெரு புதுப்பள்ளி கத்தீப் மௌலானா மன்சூர் ஆலிம், மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE. உமர், திரைப்பட நடிகர் நிழல்கள் ரவி ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

வட்டாட்சியர் பழனிக்குமார் பேசும்போது:-

இம்பாலா சுல்த்தான் தனது பொருளாதாரத்தில் நல்லதொரு இறைப்பணியான இந்த பள்ளியை உருவாக்கி இதன் மூலம் சமூக நல்லிணக்கத்தை எற்படுத்தி இளைஞர்களின் சிறப்பான ரோல் மாடலாக இருப்பதற்கு தாம் வாழ்த்துவதாக கூறினார்.

நடிகர் நிழல்கள் ரவி பேசியபோது:-

இதுபோன்ற இறையில்லங்கள் சகோதரத்துவத்தையும், சமத்துவத்தையும் போதிப்பதாகவும் இந்த சிறப்பான நிகழ்ச்சியில் கலந்து கொண்டது எனது வாழ்வில் மறக்க முடியாத நிகழ்வென்றும் இதனை எனது டைரியில் குறித்து வைப்பேன் என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

மக்கள் சேவை அறக்கட்டளை நிறுவனர் MKE. உமர் பேசியபோது:-

தனது செல்வத்தில் ஒரு பகுதியை இறையில்லம் உருவாக்க பயன்படுத்தியதோடு இல்லாமல் இளைஞர்கள் நல்வழியில் தங்களின் பொருளாதாரத்தையும் உடல் உழைப்பினையும் செயல்படுத்துவதற்கு இம்பாலா சுல்த்தான் செய்யது இப்றாகீம் முன்னுதாரணமாக திகழ்கிறார் என்றும் அவரது அறப்பணிகள் தொடர்ந்திட மக்கள் சேவை அறக்கட்டளை சார்பில் வாழ்த்துக்களை தெரிவிப்பதாக கூறினார்.

தலைமையுரையாற்றிய மாவட்ட அரசு காஜி மௌலானா சலாஹுதீன் ஆலிம் பேசியபோது:-

ஒரு மனிதன் இரண்டு வகையில் இறையருளை பெற்றிட தனது உடல் உழைப்பும் இறைவன் தனக்கு வழங்கிய பொருளாதாரமும் காரணியாக அமைகின்றது என்றவர், இந்த இரண்டு வகையிலும் இம்பாலா சுல்தான் தனது கடமையை சிறப்பாக செய்து வருவது மகிழ்ச்சியளிப்பதாகவும் இதுபோன்ற நல்லறப்பணிகளை தொடர்ந்து செய்திட அவருக்கு எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் கூறினார்.

இம்பாலா M.H.சுல்த்தான் செய்யது இப்றாஹிம் அறக்கட்டளை டிரஸ்டியான இம்பாலா சுல்த்தான் தமது நன்றியுரையில்:-

தமது நீண்ட கால கனவின் ஒருபகுதி தான் இந்த இறையில்லம் உருவாக்கம் என்றவர்,தமது பொருளாதாரத்தில் இருந்து மதுரை உம்யான் பார்வையற்ற மாணவர்களை உம்ராவுக்கு அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அதற்கான ஆயத்தப்பணிகள் நடைபெறுவதாகவும் கூறினார்.

மேலும் அவர் கூறுகையில்:- கீழக்கரை எட்டு மஹல்லா ஜமாத்துகளை சேர்ந்த ஐந்து நேர தொழுகையை பேணக்கூடிய வசதியற்றவர்களை கண்டறிந்து ஒவ்வொரு ஜமாத்திலும் தலா எட்டு பேரை உம்ராவுக்கு அனுப்பி வைக்கும் விருப்பமும் தமக்கிருப்பதால் இறைவன் நாடினால்…அதனையும் செய்து கொடுப்பேன் என்றும் கூறினார்.

அல்மஸ்ஜிதுர் ரய்யான் பள்ளியின் நிர்வாகி மௌலானா ஜஹாங்கீர் அரூஸி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் மதுரை மாத்தூர் ஜாமிஆ இஹ்ஸானுல் உம்யான் பார்வையற்றோர் மத்ரசா முதல்வர் முஹம்மத் ஷகீல் தாவூதீ, மதுரை தொழிலதிபர் ராமானுஜம், தாளையன் மோட்டார்ஸ் இர்ஷாத் அகமது, சென்னை காவல் ஆய்வாளர் ஜான் கென்னடி, சென்னை ஸ்ரீ வெங்கடேஸ்வரா டிரான்ஸ்போர்ட் ராமராஜ், கொடைக்கானல் தொழலதிபர் இஷான் பிரியாணி ஹோட்டல் பாரி ரியாஸ் கான், காயல் பட்டினம் யூசுப் அலிம், ராமநாதபுரம் காவல் துறை ராஜேஷ், பாபு ஜெராக்ஸ் கடை உரிமையாளர் பாபு, பத்திர எழுத்தாளர் கருணாநிதி, கீழக்கரை அனைத்து ஜமாத் நிர்வாகிகள், கீழக்கரை KECT சேர்மன் முகம்மது மன்சூர்,

மேலும் நூரானியா மெட்ரிக் பள்ளி தாளாளர் ஜுபைர், இந்தியன் சூப்பர் மார்க்கெட் அப்துல் சமது, SDPI கட்சி நகர் தலைவர் அபுதாஹிர், மெரினா அசோசியேட்ஸ் சேர்மன் பொறியாளர் கபீர், கீழக்கரை குயின் டிராவல் உரிமையாளர் ஹக்கீம் கான் SRE ரியல் எஸ்டேட் செய்யது இப்ராஹிம் (எ) மரிக்கா கீழக்கரை மூர் டிராவல்ஸ் ஜெய்னுதீன், இந்தியன் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் சமது, ஜாஸ் சூப்பர் மார்க்கெட் நிறுவனர் ரியாஸ் கான் மங்களம் டைல்ஸ் சந்திரா உட்பட பொதுமக்களும், பெண்களும் திரளாக கலந்து கொண்டனர்.

ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *