நெல்லை ஆக, 26
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிறுவன தலைவர் விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.
நெல்லை மாநகர் மாவட்ட தேமுதிக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நெல்லையில் நடைபெற்றது. சந்திப்பு சாலை குமரன் கோவிலில் மாவட்ட பொறுப்பாளர் சண்முகவேல் தலைமையில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது.
அதனை தொடர்ந்து மாநகர பகுதியில் பல்வேறு இடங்களில் தேமுதிக கட்சி கொடி ஏற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சிகளில் மாநில நெசவாளர் அணி மீனாட்சி சுந்தரம், மாவட்ட துணை செயலாளர் செல்வகுமார், அவை தலைவர் மாடசாமி, மாவட்ட துணை செயலாளர் சின்னத்துரை, மாவட்ட இளைஞரணி முருகன், பகுதி செயலாளர்கள் வால்சேக், தமிழ் மணி, சரவணன், மணிகண்டன், மாநகர் ஒன்றிய செயலாளர்கள் வேல்பாண்டி, சின்னதம்பி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.