சென்னை மார்ச், 11
டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கு 20 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கிராம நிர்வாக அலுவலர் 108, உதவியாளர் 264 உட்பட 6,244 பணியிடங்களுக்கு 20,37,094 பேர் விண்ணப்பித்துள்ளனர் குரூப் 4 தேர்வு ஜூன் 9-ல் நடைபெற உள்ளது விண்ணப்பதாரர்களுக்கு விரைவில் ஹால் டிக்கெட் வழங்கப்படும் என்றும், தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.