சென்னை மார்ச், 4
குரூப் 4 தேர்வுக்கு சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பங்களில் இன்று முதல் மார்ச் 6 ம் தேதி வரை திருத்தங்களை மேற்கொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. 6,244 காலி பணியிடங்களில் நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி கடந்த ஜனவரி மாதம் வெளியிட்டது. இதற்கான இணையதள விண்ணப்ப பதிவு கடந்த பிப்ரவரி 28ம் தேதியுடன் நிறைவடைந்தது. எழுத்து தேர்வு ஜூன் 9ம் தேதி காலை 9:30 மணி முதல் மதியம் 12:30 மணி வரை நடைபெற உள்ளது.