சென்னை மார்ச், 2
2024 மக்களவைத் தேர்தலுக்கான அதிமுகவின் தேர்தல் அறிக்கை நான்கு நாட்களில் வெளியாகும் என்று அக்கட்சியின் முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசிய அவர், 9 மண்டலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 60,000 திற்க்கும் மேற்பட்ட மக்களிடமிருந்து மனுக்களை பெற்று ஆய்வு செய்துள்ளோம். தமிழகம் சந்திக்கும் பிரச்சனைகளை எதிரொலிக்கும் வகையில் எங்கள் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றார்.