துபாய் பிப், 21
ஐக்கிய அரபு அமீரக துபாயில் துபாய் தர்பார் நடத்திய முதலாம் ஆண்டு விழா மற்றும் லவ் டுடே நிகழ்ச்சி நடைபெற்றது.
தமிழ் நாட்டில் இருந்து சிறப்பு விருந்தினராக வந்திருந்த சின்னத்திரை மற்றும் விஜய் டிவி குக் வித் கோமாளி பிரபலம் மணிமேகலை மற்றும் அவரது கணவர் ஹுசைன் ஆகியோருக்கு துபாயில் பல்வேறு தமிழ் நிகழ்ச்சிகள் நடத்திவரும் துபாய் முத்தமிழ் சங்கம் ஈவன்ட் நிறுவனத்தின் சார்பாக சிறப்பு வரவேற்பு அளிக்கப்பட்டது.
அந்நிறுவனத்தின் தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன் தலைமையில் நிர்வாகிகள் ஷாஹுல் ஹமீது, பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, தங்கதுரை முன்னிலையில் பொன்னாடை அணிவித்து, மலர்க்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இவ்வரவேற்பில் சிறப்பு விருந்தினர்களாக கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், துபாய் தர்பார் நிறுவன தலைவர் கபீர், தினகுரல் நாளிதழ் மற்றும் வணக்கம் பாரதம் வாரஇதழ் முதன்மை நிருபர் நஜீம் மரிக்கா, சமியுக்தா பவன் நிறுவனர் மூர்த்தி, சல்வா மியூசிக் ஸ்ரீ, தொழிலதிபர் ஜான்சி, கல்ப்கட்ஸ் பிரவீன் ஜோய் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் துபாய் தர்பார் நடத்திய நிகழ்ச்சியை பாராட்டி நிறுவனர் கபீருக்கும் கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல்லுக்கும் முத்தமிழ் சங்க தலைவர் ஷா பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.
மேலும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்திருந்த கேப்டன் டிவி கமால் முத்தமிழ் சங்கத்தின் நிகழ்ச்சிகளை பாராட்டி சங்கத்தின் தலைவர் ஷா மற்றும் சேர்மன் ராமசந்திரன் ஆகியோருக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
M.நஜீம் மரைக்கா B.A.,
இணை ஆசிரியர்.
அமீரக செய்திப் பிரிவு. U.A.E.