Spread the love

துபாய் பிப், 23

ஐக்கிய அரபு அமீரக துபாய் தேய்ரா பகுதியில் அல் கூறி கார்டன் நட்சத்திர ஹோட்டலில் வேலைவாய்ப்பு தகவல்கள், சமூக தகவல், செய்திகள் மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த வீடியோக்களை பதிவேற்றம் செய்யும் ஊடகங்களின் ஒன்றான “துபாய் தர்பார்” என்ற சமூகவலைதள ஊடகத்தின் முதலாம் ஆண்டு விழா மற்றும் “லவ் டுடே – 2024” என்ற அன்பை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி அதன் நிறுவனர் அஹம்மது கபீர் தலைமையில் மற்றும் துபாய் தர்பார் நிர்வாகிகள் முன்னிலையில் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டதோடு தமிழகத்தில் இருந்து வரவழைக்கப்பட்ட டிவி மற்றும் திரைப்பட புகழ் தம்பதிகளான மணிமேகலை (விஜய் டிவி குக் வித் கோமாளி) ஹுசைன் ஆகியோர் சிறப்பு தொகுப்பாளியாக கலந்துகொண்டு ஆர்ஜே மாயா தொகுத்து வழங்க சிறப்பாக நடைபெற்றது.

கடந்த ஆண்டில் துபாய் தர்பாரின் வளர்ச்சிக்கு உறுதுணையாக இருந்த அணைவருக்கும் நிறுவனத்தின் தலைவர் கபீர் நன்றிகளை தெரிவித்து தனது நிறுவனத்தின் தயாரிப்பில் வெளிவர இருக்கும் “தீண்டாமை” என்ற குறும்படத்தின் குறுந்தகடையும் அதன் டீசரையும் வந்திருந்த ஆதரவாளர்கள், விருந்தினர்கள் மற்றும் பார்வையாளர்கள் முன்னிலையில் வெளியிட்டார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக துபாய் முத்தமிழ் சங்க தலைவர் ஷா, சேர்மன் ராமசந்திரன், துணைசேர்மன் பிரசாத், நிர்வாகிகள் பாளையங்கோட்டை ரமேஷ், கள்ளக்குறிச்சி சின்னா, கேப்டன் டிவி முதன்மை நெறியாளர் கமால் கேவிஎல், UTS ரமேஷ், தினகுரல் தமிழ் தேசியநாளிதழ் வளைகுடா நிருபரும் வணக்கம் பாரதம் இணை ஆசிரியருமான நஜீம் மரிக்கா, குறும்பட இயக்குனர் ஆண்ட்ரியா, TEPA தலைவர் பால் பிரபாகர், GP ப்ரோடக்சன் சுமி பிரசாத், கோகுல் பிரசாத், அமீரக தமிழ் சங்கம் டாக்டர் ஷீலு, சிட்டிரெசிபி வலைதள ராஜி, அமீரக பாடகி மிருதுளா, A2B ராஜு மந்திரி, பாடகி பல்லவி வினோத்குமார்,மதுரை பிரியாணி பாலா, சாமியுக்தா பவன் முரளி, எம்டுஒய் குளோபல் அகாடமி முகம்மது அலி ,டேஸ்டி ரெஸ்டாரண்ட் இதயத்துல்லாஹ்,வணக்கம் ஹபீபீ இபு, அன்புகுடும்பம் நைனா, துபாய் புல்லிங்கோ ஷாநவாஸ், அயாஸ் மற்றும் துபாய் தர்பார்-யின் உரிமையாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனைவருக்கும் நினைவுப்பரிசு அளித்து கௌரவிக்கப்பட்டது. மேலும் நிகச்சிக்கு வந்திருந்த அனைவருக்கும் விருந்து உபசரித்து துபாய் தர்பார் நிறுவனர் கபீர் நன்றிகளை தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சிகளை துபாய் தர்பார் நிர்வாகிகள் தஞ்சை நசீர் அஹமது, ஆயிஷா,ரகுவரன்,சுவாமி மாஸ்,கோவிந்த்ராஜ், சதீஷ்,மணி, இளவரசன், தமிழ்மாறன், சத்தியா ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.

M.நஜீம் மரைக்கா B.A.,//இணை ஆசிரியர்.

அமீரக செய்திப் பிரிவு. U.A.E.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *