அமெரிக்கா பிப், 16
உலகின் மிக பெரும் பணக்காரர்களில் ஒருவனான டெஸ்லாவின் தலைவர் எலான் மஸ்கின் வருமானம் குறித்த தகவல்களை போர்ப்ஸ் இதழ் வெளியிட்டுள்ளது. 2023ல் மஸ்கின் வருமானம் 3.062 பில்லியன் டாலர்களாக உள்ளது. இதன் அடிப்படையில் மதிப்பிட்டால் அவர் ஒரு நிமிடத்திற்கு ரூ5.71 லட்சம் சம்பாதித்ததாக தெரிகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் அவரது நிகர வருமானம் குறைந்து இருந்தாலும் உலக பணக்காரர்களில் ஒருவராகவே தொடர்கிறார்.