சிவகாசி பிப், 18
குட்டி ஜப்பான் என்று பெருமையுடன் அழைக்கப்படும் சிவகாசி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறிய மற்றும் பெரிய பட்டாசு ஆலைகள் இயங்கி வருகின்றன. இங்கு சுமார் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்து வருகிறார்கள். இந்த ஆண்டு தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களுக்கான பட்டாசு தயாரிப்பை ஒரு சில ஆலைகள் முழு வீச்சில் தொடங்கியுள்ளன.
சிவகாசியில் அடுத்த வெப்பம் கோட்டை அருகே ராமதேவன் பட்டியில் விக்னேஷ் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலைகள் 60க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று மதியம் 12 மணியளவில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில் நான்கு பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியானார்கள். 5 ஊர்களில் இருந்து விரைந்து தீயணைப்புத்துறையினர் துரிதமாக செயல்பட்ட போதிலும் உயிரிழப்பை தடுக்க முடியவில்லை. காயமடைந்தோருக்கு விருதுநகர் அரசு மருத்துவமனையில் தீவர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. ஒரே நேரத்தில் 10 பேர் உயர்ந்துள்ள இந்த சம்பவம் பட்டாசு தொழிலாளர்கள் இடையே மிகுந்த மன வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் பட்டாசு ஆலை விபத்து தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் போர்மேன் சுரேஷ்குமார் என்பவரை கைது செய்துள்ளனர். மேலும் தலைமறைவான பட்டாசு ஆலை உரிமையாளர் விக்னேஷ், மேலாளர் ஜெயபால் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.