கீழக்கரை பிப், 16
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை ஹைராத்துல் ஜலாலியா மேல்நிலைப்பள்ளி அருகே தரமற்ற வாறுகால் மூடியால் விபத்து அபாயம் என்று கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பாக செய்தி வெளியிட்டிருந்தோம்.
நமது செய்தியை தொடர்ந்து பல்வேறு சமூக வலை தளங்களில் சமூக ஆர்வலர்களும் இதுபற்றி கடும் விமர்சனங்களை முன்வைத்தனர்.
இன்று மாலை அவசரம் அவசரமாக உடைந்து மூடியை அகற்றி விட்டு புதிய மூடியை போட்டுள்ளனர். இந்த வேலையும் கூட திருப்திகரமாக இல்லையென்றே கூறப்படுகிறது. இந்த சாலை வழியாக கனரக வாகனங்கள் அதிகம் சென்று வருவதால் தரமான இரும்பு மூடி போட்டால் மட்டுமே நிரந்தர தீர்வாக இருக்கும் என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்