கீழக்கரை பிப், 15
கீழக்கரை நகராட்சிக்குட்பட்ட குத்தகைக்காரர் உடைய போக்குகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.போக்குவரத்து நெருக்கடியை தவிர்க்கும் வகையில் வெளிமாநில பஸ்களை பழைய பேருந்து நிலையம் வரை அனுமதிக்க கூடாதென நகராட்சி நிர்வாகம் குத்தகைதாரரிடம் வலியுறுத்தியும் அவ்வப்போது குத்தகை பணம் பெற்றுக்கொண்டு வெளிமாநில பேருந்துகளை ஊருக்குள் அனுமதிப்பது தொடர் கதையாகி வரும் வேளையில் தெருவோர வியாபாரிகளிடம் ஒரே நாளில் மூன்று ரசீதுகளை கொடுத்து பணம் பறிக்கும் போக்கும் அதிகரித்து வருகிறது.
நேற்று(14.02.2024) தெருவோர பெண் வியாபாரி ஒருவரிடம் கலர் கலரா மூன்று ரசீதுகளை கொடுத்து 90 ரூபாய் வசூலித்து உள்ளனர் ஒரு நாளைக்கு 30 ரூபாய் தான் வசூலிக்க வேண்டுமென்பது நகராட்சியின் அறிவுறுத்தல். ஆனால் குத்தகைதாரரோ,90 ரூபாய் என்னும் பகல் கொள்ளையை அரங்கேற்றி வருகிறார்.
ஏழை எளிய தலை சுமை வியாபாரிகள்,தெருவோர வியாபாரிகள் தங்களின் அன்றாட வயிற்று பிழைப்புக்காக செய்யும் வியாபாரத்தில் கிடைப்பதோ? நூறு,இருநூறு தான். அதிலும் குத்தகைதாரர் 90 ரூபாயை பிடுங்கி கொண்டால் ஏழை மக்களின் நிலை என்னாகும்?
இதுகுறித்த விமர்சனங்கள் வாட்சப்,முகநூல் போன்ற சமூகவலை தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
கீழக்கரை நகராட்சி நிர்வாகம் உடனடியாக தலையிட்டு குத்தகைதாரரின் அத்துமீறலை தடுத்து நிறுத்திட வேண்டுமென தெருவோர வியாபாரிகளும் பொதுமக்களும் எதிர்பார்க்கின்றனர்??
ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்