சென்னை பிப், 9
தமிழ்நாட்டிற்கான வரிப்பகிர்வு 192 % அதிகரித்துள்ளதாக நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். கடந்த 2004 முதல் 2014 வரை ரூ. 94, 977 கோடியாக இருந்த தமிழ்நாட்டுக்கான மத்திய அரசின் வரி பகிர்வு 2014 முதல் 2024 வரை ரூ.2,77,444 கோடியாக அதிகரித்துள்ளது. கடந்த 2004 முதல் 2014 வரை ரூ.57,924 கோடியாக இருந்த மத்திய அரசின் நிதியுதவி 2014 முதல் 2023 வரை ரூ.2,30,839 கோடியாக அதிகரித்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.