சென்னை பிப், 3
அரசுப் பள்ளிகளில் நடத்தப்படும் வானவில் மன்றங்களுக்கு உபகரணங்கள் கொள்முதல் செய்ய நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 2022 நவம்பர் தொடங்கிய திட்டமானது, தமிழகம் முழுவதும் உள்ள 13,210 அரசு பள்ளிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட வாரியாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் உபகரணங்கள் கொள்முதல் செய்யும் போது அதற்கான விதிகளை பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.