மத்திய உயர்கல்வி நிறுவனங்களான IIT, NIT ஆகியவற்றில் B.E, B.Tech உள்ளிட்ட இளநிலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை JEE நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடைபெறுகிறது. அந்த வகையில் 2024ம் ஆண்டுக்கான முதன்மை தேர்வின் முதல் கட்ட தேர்வு முடிந்த நிலையில், இரண்டாம் கட்ட தேர்வுக்கான விண்ணப்ப பதிவு தற்போது தொடங்கியுள்ளது. https://jeemain.ntc.ac.in என்ற தளத்தில் மார்ச் 2 ம் தேதிக்குள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.