சென்னை ஜன, 19
ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 100 நகரங்களில் இதுவரை 76 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள், 600 கிலோ மீட்டர் தொலைவில் மிதிவண்டி பயண பாதைகள், 6,885நவீன வகுப்பறைகள், 40 எண்ம நூலகங்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன என்று மத்திய வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 2015 ம் ஆண்டு தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் காலக்கெடு வரும் ஜூன் மாதத்துடன் நிறைவடைகிறது.