சென்னை ஜன, 19
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் இம்மாத இறுதிக்குள் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும் என அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். “அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் இங்கிருந்து தான் செயல்படுகின்றன. மற்ற பேருந்துகளும் இங்கு வந்து தான் சென்னையில் மற்ற பகுதிகளுக்கு செல்கின்றன. பொங்கலுக்கு பிறகு ஆம்ணி பேருந்துகள் முழுமையாக இங்கிருந்து இயக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது” என தெரிவித்துள்ளார்.