சென்னை பிப், 2
பெட்ரோல் டீசல் சிலிண்டர் விலை குறையும் என்று எதிர்பார்த்த மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை என முதல்வர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார். ஏழை, எளிய மக்களுக்கு எந்த அறிவிப்பும் இல்லை. பொருளாதார வளர்ச்சி இல்லை, பண வீக்கம் குறையவில்லை, வறுமை வேலையில்லா திண்டாட்டம் ஒழியவில்லை. ஆனால் இதெல்லாம் செய்து விட்டதாக பொய்யான அறிக்கையை தாக்கல் செய்துள்ளார் நிதி அமைச்சர் என அவர் தெரிவித்துள்ளார்.