சென்னை பிப், 1
அனைவரும் படித்த வேலையை விட பிடித்த வேலையை செய்வதுதான் முன்னேற்றத்திற்கு நல்லது என்று நடிகர் ரோபோ சங்கர் கூறியுள்ளார். தன்னை சந்திக்க வந்த முடி திருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினரை தானே நேரில் சென்று சந்தித்து கௌரவித்தார். அதற்கு பிறகு பேசி அவர் சிங்கப்பூர் சலூன் திரைப்படத்திற்கு பிறகு தங்களின் மீதான மக்களின் பார்வை மாறியுள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள் தன்னிடம் கூறியதாக குறிப்பிட்டார்.