Spread the love

கீழக்கரை பிப், 1

கீழக்கரையில் நிலவும் கடும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த 24.01.2024 அன்று நகராட்சி அலுவலகத்தில் நகர்மன்ற தலைவர் செஹனாஸ் ஆபிதா தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் ஆணையாளர், காவல் உதவி ஆய்வாளர், நகர்மன்ற துணைத்தலைவர், கவுன்சிலர்கள், தண்ணீர் லாரி உரிமையாளர்கள், ஓட்டுனர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.

பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவர் மாணவியர்களுக்கு காலை நேரத்தில் போக்குவரத்து நெருக்கடிக்கு பெரிதும் காரணமான கனரக தண்ணீர் லாரிகள் பிப்ரவரி முதல் தேதியில் இருந்து காலை 10 மணி முதல் 12 மணி வரைக்கும் பகல் 2 மணி முதல் 4 மணி வரைக்கும் இரவு 6 மணி முதல் 9 மணி வரைக்கும் தான் ஊருக்குள் தண்ணீர் விநியோகம் செய்ய வேண்டுமென தீர்மானித்து அனைவரிடமும் ஒப்புதல் கையொப்பம் பெறப்பட்டது.

இதனை மீறுவோருக்கு முதல் முறை 500 ரூபாய் அபராதமும், இரண்டாம் முறை 2000 ரூபாய் அபராதமும், மூன்றாம் முறை RTO அலுவலர் மூலம் நடவடிக்கை எடுப்பதென்றும் முடிவு செய்யப்பட்டு, இதனை நகராட்சி ஆணையாளர் செல்வராஜ் பொது அறிவிப்பு செய்தார்.

இந்நிலையில் பிப்ரவரி முதல் நாளான இன்று அரசு அதிகாரிகளின் உத்தரவை காற்றில் பறக்க விட்டுட்டு காலை 8.15 மணிக்கு தண்ணீர் லாரி வழக்கம் போல் ஊருக்குள் வந்து தண்ணீர் விநியோகம் செய்து கொண்டிருக்கிறது.

போக்குவரத்து நெருக்கடியை ஒழுங்குபடுத்துவதற்கு கூட்டம் நடத்தி முடிவு செய்தால் மட்டும் போதாது,அது நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும்.

குடிநீர் வழங்கும் வாகனங்களுக்கு நகராட்சி அனுமதி உரிமம் கொடுக்கப்பட்டுள்ளதா? தண்ணீர் டேங்க் சுத்தம் செய்யப்பட்டுள்ளதா? என்பனவற்றில் சுகாதாரத்துறை ஆய்வாளர் உரிய நடவடிக்கை மேற்கொள்கிறாரா? என்பதெல்லாம் பெரும் கேள்விக்குறியாகவே?உள்ளது.

நகராட்சி உத்தரவை மீறும் தண்ணீர் லாரி ஓட்டுனர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா? வழக்கம் போல் காத்திருப்போம்.

ஜஹாங்கீர் அரூஸி//மாவட்ட நிருபர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *