சென்னை ஆக, 25
லைகா நிறுவனத்துடன் இணைந்து உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் இந்தியன் 2 படத்தைத் தயாரிக்கிறது.
இந்தியன் 2 படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது. ஷங்கர் – கமல் கூட்டணியில் லைகா தயாரிப்பில் உருவான இந்த திரைப்படம் படப்பிடிப்பின் போது ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து படப்பிடிப்பு பாதியிலேயே நின்றது.
இந்நிலையில் இந்த படத்தைத் தயாரிக்கும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சென்னையில் நேற்று அதற்கான பூஜை நடைப்பெற்றுள்ளது. இதில் இயக்குனர் சங்கர் உட்பட தயாரிப்பு நிர்வாகிகள் மற்றும் பட குழுவினர் கலந்து கொண்டனர்.