Spread the love

சென்னை ஆகஸ்ட், 25

சூர்யா நடிப்பில் வெளியான ‘ஜெய்பீம்’ படத்தின் இயக்குனர் ஞானவேல், நடிகர் சூர்யாவின் தயாரிப்பு நிறுவனமான ‘2 டி’ எண்டர்டைன்மென்ட்ஸ் மற்றும் படக் குழுவினர் மீது, சென்னை சாஸ்திரி நகர் காவல்துறையினர் காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உண்மை சம்பவத்தின் அடிப்படையில் இத்திரைப்படம் எடுக்கப்பட்ட நிலையில், காவல்துறை சித்ரவதையில் கொல்லப்பட்ட ராஜாக்கண்ணுவின் உறவினரும், அந்த வழக்கின் பாதிக்கப்பட்டவருமான கொளஞ்சியப்பன் என்பவர் சென்னை சைதாப்பேட்டை உயர் நீதிமன்றம் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தங்களது வாழ்க்கையின் உண்மை சம்பவத்தை, தங்கள் அனுமதி இல்லாமல் திரைப்படமாக்கியதாகவும், காப்புரிமைச் சட்டத்தின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜாக்கண்ணுவின் உறவினர் கொளஞ்சியப்பன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்நிலையில், வரும் 26 ம் தேதிக்குள் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாஸ்திரி நகர் காவல் நிலையத்தினருக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்த நிலையில், தற்போது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *