ஆகஸ்ட், 24
வசூல் ராஜா எம்பிபிஎஸ், ட்ரீம்ஸ், ஜீ, சென்னை 28, தோழா, சரோஜா, ராமன் தேடிய சீதை, சத்தம் போடாதே உள்ளிட்ட பல படங்களில் நடித்திருப்பவர் நடிகர் நித்தின் சத்யா. நடிகராக மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் உள்ளார்.
இந்நிலையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு பெய்த மழையின் போது நிகழ்ந்த விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியுள்ளதாக கூறியுள்ளார். அதாவது நேற்று முன்தினம் இரவு சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இடிமின்னல் மற்றும் சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்தது.
இதனால் சென்னை நகரின் பல இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது சாம்கோ ஆர்கேஎஃப்ஐ ஜங்ஷனில் மரம் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருந்து நூலிழையில் தப்பியதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
இதனை கேட்ட ரசிகர்கள் அவரை பாதுகாப்பாக இருக்குமாறு கூறியுள்ளனர். நித்தின் சத்தியா கடைசியாக 2019ம் ஆண்டு வெளியான மார்கெட் ராஜா படத்தில் நடித்தார். அதன்பிறகு அவரை எந்த படத்திலும் பார்க்க முடியவில்லை. இருப்பினும் சமூக வலைதளங்களில் உற்சாகமாக உள்ள நித்தின் அவ்வப்போது ரசிகர்களுடன் உரையாடி வருகிறார்.